இலங்கையில் காற்று இல்லை, அதிக வெப்பம்

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் ஓட்டம் குறைந்து வருவதன் காரணமாக மேல் மற்றும் சப்ரகமுவ மற்றும் தென் மாகாண மக்கள் வழமைக்கு மாறாக வெப்பத்தை உணர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம், தென் மற்றும் சப்ரகமுவ பகுதிகளில் காற்றின் ஓட்டம் குறைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் டெய்லி மிரர் பத்திரிகைக்கு தெரிவித்தார். “இலங்கையின் சில பகுதிகளில் காற்றோட்டம் குறைந்து வருகிறது. எனினும், வடக்கு மற்றும் கிழக்கின் நிலைமை வேறுபட்டது, ஏனெனில் ஓரளவு கடுமையான காற்று ஓட்டம் உள்ளது, ”என்று அவர் கூறினார்.

“இது ஒரு அசாதாரண நிகழ்வு அல்ல, இது ஆண்டின் இந்த நேரத்தில் நடக்கிறது. எதிர்வரும் சில மாதங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்தில் சூரியன் நேரடியாக இலங்கைக்கு வரும்” என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று பிற்பகல் நிலவரப்படி கொழும்பில் 35°C, கட்டுநாயக்கவில் 33°C, மாத்தறை 32°C, குருநாகல் 31°C மற்றும் இரத்தினபுரியில் 31°C ஆக வெப்பநிலை பதிவாகியுள்ளது. மாறாக, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 30 டிகிரிக்கும் குறைவாக இருந்தது.

Exit mobile version