கொழும்பு – ஜம்பட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர் புளூமண்டல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கியைச் சந்தேக நபர் சேதாவத்தை பகுதியிலிருந்து மஹவத்தை பகுதிக்கு முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 15 ஐ சேர்ந்த 34 வயதுடையவராவார்.
கடந்த 25 ஆம் திகதி ஜம்பட்டா வீதியிலுள்ள இறைச்சிக் கடைக்கு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
news-image