சட்டவிரோதமாக 160 சிகரெட்டுகளை தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதனையடுத்து அவருக்கு மாளிகாகந்த நீதிவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க 80,000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மட்டக்குளி காக்கைதீவைச் சேர்ந்த ஒருவருக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
சுங்க வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட 160 சிகரெட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் புகையிலை வரிச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக கொழும்பு, முகத்துவாரம் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.