இஸ்ரேலின் சனத்தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கூறுகையில், மார்ச் மாதத்தில் இலங்கையில் இருந்து சுமார் 1,000 தொழிலாளர்கள் இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணியாற்றுவதற்காக, முதன்மையாக சிட்ரஸ் பழங்களைப் பறிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் 122 இலங்கைத் தொழிலாளர்கள் தரையிறங்கியுள்ளனர், இந்த வாரம் 377 பேர் மற்றும் அடுத்த வாரம் மேலும் 258 தொழிலாளர்கள் இஸ்ரேலில் இறங்கவுள்ளனர்.
இலங்கைத் தொழிலாளர்கள் முக்கியமான தொழிற்துறையில் உழைக்கும் கரங்களின் தேவை மற்றும் இஸ்ரேல் அரசின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுவதில் உடனடி பதிலை வழங்குவதாக அமைச்சு கூறியது. (ANI/TPS)
