ஜோதிகாவின் 50-வது படமாக வெளிவந்த ‘உடன்பிறப்பே’, தெலுங்கில் ‘ரத்த சம்பந்தம்’ என்கிற பெயரில் வெளியானது. பாசத்தைப் பிழிகிற கதை என விமர்சனங்கள் வந்தாலும், பி & சி சென்டர்களில் கவனம் ஈர்த்தது அந்தப் படம்.
விஜய் சேதுபதியின் தேதி, நீண்ட நாள்களுக்குப் பிறகு கிடைத்திருப்பதால், ஒருவழியாக ‘விடுதலை பாகம் 2’ ஷூட்டிங்கை மீண்டும் தொடங்குகிறார் வெற்றிமாறன். இன்னும் 15 நாள்கள் விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டதாம். ஆனால், மொத்தமாக அத்தனை நாள்களைத் தர இயலாத சூழலைச் சொன்னாராம் விஜய் சேதுபதி. இதற்கிடையில், தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் நெருக்கடிகளும் அதிகமாகின்றனவாம். ஏப்ரல் மாதத்துக்குள் ஷூட்டிங்கை முடிக்கத் தீவிரமாகத் திட்டமிடுகிறார்கள்.