SLFP நெருக்கடி: தலைமையகத்திற்குள் நுழைய தடை

காணாமல் போன கோப்புகள் தொடர்பிலான முறைப்பாடு தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகள் காரணமாக கொழும்பு டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் செல்வது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் முடியும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு நியூஸ்வைருக்கு தெரிவித்துள்ளது.

அலுவலகத்தில் இருந்து பல கோப்புகள் மற்றும் அலமாரியின் சாவி காணாமல் போயுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 05) மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதன்படி, முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மருதானை பொலிஸார் ஆரம்ப விசாரணைகளுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு இன்று விஜயம் செய்துள்ளனர்.

இதனால், அலுவலகத்துக்குள் செல்வது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை தடையின்றி மேற்கொள்ளும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Exit mobile version