வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 05) ஹிக்கடுவ கடற்கரையில் நீரில் மூழ்கி 57 வயதுடைய வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட லிதுவேனியன் பிரஜையான இவர் நேற்று மாலை கடலில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்கரையில் உயிர்காப்பாளர்களால் மீட்கப்பட்ட நிலையில், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.