இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வாட்ஸ்அப் மூலமாகவே பணம் அனுப்பும் அம்சத்தை விரைவில் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து பல்வேறு விதமான அம்சங்களை இதற்கு முன்பு அறிமுகப்படுத்தியது. மேலும் தொடர்ந்து இன்னும் எக்கச்சக்கமான அம்சங்களை வெளியிட்டு வருகிறது. தற்போது சமீபத்தில் வெளியான அறிக்கைகளின் படி வாட்ஸ்அப் அதன் யூசர்களை வெளிநாட்டு ட்ரான்ஸாக்ஷன்களை செய்வதற்கு அனுமதிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள யூசர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி சர்வதேச பேமெண்ட்களை செய்வதற்கான புதிய அம்சத்தை தற்போது உருவாக்கி வருகிறது. இது ஏற்கனவே அப்ளிகேஷனில் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய யூனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface – UPI) மூலமாக சாத்தியமாக்கப்படும்.

இது சம்பந்தமாக வெளியான ஸ்கிரீன்ஷாட் ஒன்றில் யூசர்கள் தாங்களாகவே இன்டர்நேஷனல் பேமெண்ட் அம்சத்தை எனேபிள் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை எவ்வளவு நேரம் ஆக்டிவாக வைக்க விரும்புகிறார்கள் என்பதையும் தேர்வு செய்வதற்கான ஆப்ஷனை யூசர்கள் பெறுகிறார்கள்.
Google Pay 7 நாட்கள் ட்ரான்ஸாக்ஷன் விண்டோ வழங்கும்போது வாட்ஸ்அப் 3 மாதங்கள் வரையிலான கால அவகாசத்தை இந்த அம்சத்திற்கு வழங்குகிறது. இந்தியாவில் உள்ள Google Pay மற்றும் PhonePe போன்ற UPI அப்ளிகேஷன்கள் ஏற்கனவே இது மாதிரியான சேவைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சத்தை வாட்ஸ்அப் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இது தவிர வாட்ஸ்அப் அதன் ஸ்டேட்டஸ் அப்டேட் இன்டர்ஃபேசிலும் ஒரு சில முக்கியமான டிசைன் மாற்றங்களை திட்டமிட்டு வருவதாகவும் சமீபத்திய அறிக்கை ஒன்றில் தகவல் வெளியானது. யூசர்கள் தங்களுடைய ஸ்டேட்டஸில் ஷேர் செய்ய நினைக்கும் கன்டென்ட் வகையை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எளிதாக மாற்றுவதற்கான அம்சத்தை வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது.
ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளில் யூசர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான புதிய கருவிகளை வாட்ஸ்அப் கூடிய விரைவில் வெளியிட உள்ளதாக WA Beta Info கூறியுள்ளது. இந்த அப்டேட் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள வாட்ஸ்அப் பீட்டாவின் ஆண்ட்ராய்டு 2.24.7.16 அப்டேட்டில் கிடைக்கிறது.
Also Read : 120Hz டிஸ்ப்ளே… 5,000mAh பேட்டரி… 8GB ரேம்.. ரூ.14,999 விலையில் அறிமுகமான ரியல்மி 12எக்ஸ் 5ஜி..
போர்டலில் ஷேர் செய்யப்பட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்டின் படி, ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளுக்கு பல்வேறு மீடியா ஃபார்மெட்டுகளில் மாறுவதற்கு புதிய கம்போசரை வாட்ஸ்அப் வடிவமைத்துள்ளது. ஸ்டேட்டஸ் அப்டேட் ஸ்கிரீனின் கீழ்ப்புறத்தில் காணப்படும் டெக்ஸ்ட், வீடியோக்கள் அல்லது போட்டோக்களை தேர்வு செய்து யூசர்கள் அதனை ஸ்டேட்டஸில் ஷேர் செய்யும் ஆப்ஷனை பெறுவார்கள். இங்கிருந்து ஒருவர் பயன்படுத்த விரும்பும் மீடியா வகையை எளிமையாக தேர்வு செய்து கொள்ளலாம்.