இன்றைய ராசி பலன் – ஏப்ரல் 07 2024 – ஞாயிற்றுக்கிழமை

மேஷம்:
உங்கள் வாழ்க்கை துணையுடன் மனம் திறந்து பேசினால் உங்கள் மனதிற்கு ஏற்ற சரியான முடிவை எடுக்கலாம். உங்களுடைய கெரியரில் புதிய வாய்ப்பு அல்லது பொருளாதார லாபம் கிடைக்கலாம். சுய பராமரிப்பு மற்றும் ஓய்வு பெறுவதன் மூலமாக உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும்.

ரிஷபம் :
நீங்கள் சமீபத்தில் சந்தித்த ஒரு நபருடன் மனதளவில் நெருக்கமாவதற்கு வாய்ப்புள்ளது. உறவுகளுக்குள் விட்டுக் கொடுத்து செல்ல பரிந்துரைக்கப்படுகிறது. கெரியரில் பொருளாதார வெற்றியை அடைவீர்கள். சம்பள உயர்வு அல்லது பிரமோஷன் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. புத்திசாலித்தனமான முதலீடுகளில் ஈடுபடுங்கள்.

மிதுனம்:
எதார்த்தமான விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். கூடிய விரைவில் பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவீர்கள். பிரமோஷன் அல்லது புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குறுகிய கால முதலீடுகளை தவிர்க்கவும். பயணம் செல்வது உங்களுக்கு உட்புற அமைதியை ஏற்படுத்தும்.

கடகம்:
நீங்கள் விரும்பும் ஒரு நபர் உங்களை தவிர்ப்பது போல நீங்கள் உணரலாம். பிறரிடம் இருந்து பாராட்டுக்களை பெறுவீர்கள். கண்டுபடி முதலீடு செய்வதை தவிர்த்து விட்டு புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பது நல்லது. சுய பராமரிப்புக்கு முன்னுரிமை வழங்குங்கள்.

சிம்மம்:
உறவுகளுக்குள் புதிய தொடக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. மனதில் இருக்கக்கூடிய உங்களுடைய உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். கெரியரில் பொருளாதார நிலைப்பாட்டை அடைவீர்கள். குடும்பத்தினர் அல்லது உடன் பணிபுரிபவர்களின் ஆதரவை பெறுவீர்கள்.

கன்னி:
உங்களுடைய உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களுடைய வாய்ப்புக்காக நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கலாம். வேலை சம்பந்தமாக பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கலாம்.

துலாம்:
உங்களை நீங்களே நம்புவதற்கு கற்றுக் கொள்வீர்கள். உங்கள் உள்ளுணர்வை தொடர்வதற்கு முயற்சி செய்வீர்கள். கெரியரில் ஒரு சில சவால்கள் அல்லது தடைகளை சந்திக்க நேரிடலாம். பயணம் மேற்கொள்ளுதல் மூலமாக புதிய வாய்ப்பு உங்களைத் தேடி வரும்.

விருச்சிகம்:
புதிய காதலை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கலாம். உங்கள் துணையுடன் வலிமையான மற்றும் மனநிறைவான உறவை மேற்கொள்வீர்கள். உங்களுடைய இலக்குகளில் கவனம் செலுத்தி உங்கள் கனவுகளை அடைய முயற்சி செய்வீர்கள். சுய பராமரிப்பில் ஈடுபட்டு உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவீர்கள். .

தனுசு:
உறவுகளுக்குள் விட்டுக் கொடுத்து செல்ல பரிந்துரைக்கப்படுகிறது. அன்புக்குரியவர்களுடன் உணர்வுபூர்வமான பந்தம் ஆழமாகும். உங்களுடைய இலக்குகள் குறித்து தெளிவாக இருப்பது அவசியம்.

மகரம்:
ஒரு புதிய ரொமான்டிக்கான உறவுக்குள் நுழைவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் எதையும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பேசுவது நல்லது. கெரியரில் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். உங்களுடைய அன்றாட வழக்கத்தில் உடற்பயிற்சியை சேர்ப்பதன் மூலமாக பலனடைவீர்கள். இயற்கையோடு நேரத்தை செலவழியுங்கள்.

கும்பம்:
உறவுக்குள் வளர்ச்சி மற்றும் மாற்றத்தை நோக்கிய கட்டத்திற்குள் நுழைவீர்கள். பழைய விஷயங்களை மறந்து எதிர்காலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். சுய பராமரிப்புக்கு முன்னுரிமை வழங்கவும்.

மீனம்:
உறவுக்குள் வளர்ச்சி மற்றும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். கெரியரில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மிகப்பெரிய விஷயங்களை அடைவதற்கான மாற்றங்கள் நிகழும். மன அமைதியை கண்டுபிடிப்பதன் மூலமாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவீர்கள்.

Exit mobile version