ஹிருணிகா மற்றும் ஆதர்ஷாவிடம் இருந்து அஷு மாரசிங்க 1.5 பில்லியன் இழப்பீடு கோருகிறார்

பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ஆஷு மாரசிங்க, தனது சட்டத்தரணி ஊடாக ஆதர்ஷ கரடானா மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோரிடமிருந்து 1.5 பில்லியன் நட்டயீடு கோரியுள்ளார். .டிசம்பர் 23 அன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் ஆஷு மாரசிங்கவின் முன்னாள் இணையர் ஆதர்ஷ கரடானா ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்  ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் ஆஷு மாரசிங்க தனது செல்லப்பிராணியான நாயை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டினர். இது தொடர்பான காணொளிகளை புகைப்படங்களையும் வெளியிட்டனர்மாரசிங்கவின் சட்டத்தரணி மாலின் ராஜபக்ஷ, இந்த செய்தி மற்றும் புகைப்படங்களை ‘பொய்’, ‘அவதூறு’ நடவடிக்கை என தெரிவித்துள்ளார். குறித்த காணொளி உண்மையானது அல்ல என்றும் தயாரிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி செய்தியாளர் மாநாட்டில் எனது கட்சிக்காரர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன” என்று கரடானாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.பிரேமச்சந்திர வேண்டுமென்றே தீங்கிழைக்கும் நோக்கத்திற்காக சம்பவம் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.டிசம்பர் 24 அன்று, சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்ட காணொளிக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) மாரசிங்க முறைப்பாடு செய்துள்ளார். அத்துடன் .
விலங்கை பாலியல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டை அவர் கடுமையாக நிராகரித்துள்ளார்.
Exit mobile version