உள்ளூராட்சிசபைத் தேர்தல் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

நாட்டின் அரசியல் நிலைவரங்களை நோக்கும் போது தேர்தலொன்றுக்கு சந்தர்ப்பம் இருப்பதாகவே தெரிகின்றது. புதுவருடத்தில் (2023) ஏதாவதொரு தேர்தலை எதிர்கொண்டேயாக வேண்டும். இவ்வாறு எதிர்கொள்ள நேரும் தேர்தலில் எவ்வாறு நடந்து கொள்வது? இதுதான் கட்சிகளுக்குள்ள சிக்கல். பொருளாதாரம் அடியோடு வீழ்ந்துள் ள நிலையில்,வாக்களிக்கும் விருப்புகள் மக்களிடம் இருக்குமா?

இதனால்,விருப்புக்களை ஏற்படுத்தும் வியூகங்கள், பிரசாரங்களையே கட்சிகள் சிந்திக்கின்றன. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் வகுக்கும் வியூகங்கள் உள்ளூராட்சித் தேர்தலுக் கு உதவுமா? இல்லை ஊர்ப்பிரச்சினையை உசுப்பேற்றுவதா? உள்ளூராட்சித் தேர்தலுக்கான களச்சாத்தியங்கள் தென்படுவதால்,சுயேச்சைக் குழுக்க ள் கூட உஷாரடையும் சூழலிது.

சமூகம்,உரிமை, மற்றும் இருப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் தேர்தலில்லை உள்ளூராட்சி தேர்தல். பாரிய கூட்டணிகள் அமைத்து எதிரிகளை வீழ்த்துமளவுக்கு முக்கியமானதும் இல்லை. இந்தளவு இலட்சணமுள்ள இத்தேர்தலைத்தான் நடத்துமாறு எதிரணிகளும், இதற்கேற்ற சூழலில்லை என அரச அணிகளும் அடம்பிடிக்கின்றன.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு,எதிரணிகள் வழக்கும் தாக்கல் செய்துள்ளன. ஜனவரி 18 இல்தான், இந்த வழக்கு விசாரிக்கப்ப ட உள்ளது. இதனால்,எதை எதிர்வு கூறுவதெனத் தெரியாத குழப்பமே உள்ளது.

நிதியில்லை,நேரமில்லை மற்றும் பணவீக்கம் எனக் கூறப்படும் வியாக்கியானங்களுக்கு, ஏற்கனவே ஒதுக்கிய நிதி உள்ளதாக புஞ்சிஹேவா பதிலளித்திருக்கிறார். மார்ச் 10க்கு முன்னர் தேர்தல், 20க்குள் வெற்றியீட்டியோர் விபரம் என்றும் அறிவித்து விட்டார் புஞ்சிஹேவா.

மலையேறுவது போன்ற ஒரு பலப்பரீட்சைதான் இது. எல்லாத் தரப்புக்கும் இதுதான் நிலை. ஆனாலும், எதிரணி எதைப்பற்றியும் சிந்திப்பதாயில்லை. ஏறினாலே வெற்றிப்படிதான் எனக் குதிக்கிறது.

கட்சிகளின் உட்கட்டமைப்புக்களைப் பரீட்சிக்கும் தேர்தலாக இது இருக்கப் போவதுமில்லை. ஆட்சிக்கு ஆரூடம் கூறப்போகும் தேர்தலாகவே நடக்கப் போகும் தேர்தலாக இருக்கும். முஸ்லிம் தலைமைகள் என்ன செய்யும்? பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று முஸ்லிம் தலைமைகள் உள்ளன. எதைச் சொல்லி முஸ்லிம்களை இத்தலைமைகள் ஒன்றுசேர்க்கும்?

வடக்கு,கிழக்கு மாகாண முஸ்லிம்களும் பட்டதெல்லாம் போதும்,தொட்டதையே தொடர்வோம் என்றெண்ணுகின்றனர். பெரும்பான்மைச் சமூகத்துடன் பொருந்திப்போக முயலுமளவுக்கு, தமிழ் சமூகத்துடன் புரிந்துபோகும் போக்குகள் முஸ்லிம்களிடம் குறைவு தான்.

வடக்கு,கிழக்கில் ஒரே மொழியைப் பேசும் இரண்டு சமூகங்களும் ஒரு தாய் பிள்ளைகள்தானா? அவ்வாறானால், தாய்,பிள்ளைச் சண்டைகள் தண்ணீரில் எழுத்து என்பார்களே! இதுவோ,கல்லறைச் சுவரில் எழுதிய கல்வெட்டுக்களாக உள்ளதே!

எதுவானாலும், உள்ளூராட்சி தேர்தல் நடைபெறுமா னால், இந்தப் பகைகளை மேலும் கூர்மையாக்கும் பிரசாரங்கள் தமிழ், முஸ்லிம் தரப்பு மேடைகளில் மேடையேறக் கூடாது. சிறுபான்மைச் சமூகங்களின் மோதல்கள் கூர்மையடைந்தால், அதிகாரங்களை, கையேந்திக் கேட்கும் நிலையே ஏற்படும்.

Exit mobile version