கொழும்பின் பல பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை!

 

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (07) 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (08) மாலை 04.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு 01, 02, 03, 04, 07, 09, 10 மற்றும் 11 ஆகிய இடங்களுக்கு இந்த காலத்தில் நீர் விநியோகம் தடைப்படும் என அச்சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version