பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி இடம்பெற்று வருகிறது

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்கள பொறுப்பதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, 300 இற்கும் மேற்பட்ட வகையான புத்தகங்களின், 43 மில்லியன் பிரதிகள் அச்சிடும் பணிகள் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் அரசாங்க பாடசாலைகளில் 1ஆம் தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், புதிய பாடசாலை தவணையில் இலவசமாக மாணவர்களுக்கு விநியோகிக்கும் நோக்கில் இப்பாடப்புத்தகங்கள் புதிதாக அச்சிடப்பட்டு வருவதாக அரசாங்க அச்சக திணைக்கள பொறுப்பதிகாரி கங்கானி லியனகே குறிப்பிட்டார்.

ஏற்கனவே அரசாங்க பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பாடசாலைகள் பலவற்றில் முதலாம் தவணை கல்வி நடவடிக்கை இவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை கொள்வனவு செய்வதில் சிக்கல் நிலை காணப்படுவதாக, பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version