தேர்தலை இடைநிறுத்தக்கோரும் மனுவை நிராகரிக்குமாறு கோரிக்கை

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை இடைநிறுத்துமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த ரிட் மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிக்குமாறு இரு நகர்த்தல் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் இன்றைய தினம் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல மற்றும் சமூக செயற்பாட்டாளர் எரங்க குணசேகர ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version