இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (10) நாணயமாற்று விகிதத்தினை வெளியிட்டுள்ளது.
📌அமெரிக்க டொலர்
இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 360.05 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது 371.39 ரூபாவாக காணப்படுகிறது.
📌பவுண்ட்
ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 436.73 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது 453.53 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
📌குவைத் தினார் மற்றும் கட்டார் ரியால்.
குவைத் தினாரின் பெறுமதியானது 1183.96 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 99.06 ரூபாவாக காணப்படுகிறது.
