அத்தியாவசிய பொருட்கள் நான்கின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 04 உணவு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி, உள்ளூர் சம்பா அரிசியின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 220 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உள்ளூர் வெள்ளை பச்சை அரிசி விலை 16 ரூபாவினால் குறைக்கப்பட்டு 189 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

உள்ளூர் நாட்டரிசி விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 198 ரூபாவுக்கு

விற்பனை செய்யப்படவுள்ளது.

கோதுமை மா விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 240 ரூபாவாகுமென லங்கா சதொச அறிவித்துள்ளது.

Exit mobile version