மட்டு-கொழும்பு பஸ் ஊறணியில் பனைமரத்துடன் மோதி விபத்து

03 பயணிகள் படுகாயம்

மட்டக்களப்பு, கொழும்பு பிரதான வீதி ஊறணி பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 03 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த பஸ் நேற்று (14) அதிகாலை 5.30 மணிக்கு மட்டு ஊறணி சந்திக்கருகில் வேககக்கட்டுப்பாட்டை மீறி வீதியோரமாக இருந்த பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது. பஸ்சின் முன்னால் திடீரென குறுக்கே வந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபரை காப்பாற்ற முயற்சித்த வேளையிலேயே பஸ் பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக பஸ் நடத்துனர் தெரிவித்தார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Exit mobile version