வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் தொடர்பான அமைச்சு பதவியில் இருந்து அமைச்சர் மகிந்த அமரவீர விலகியுள்ளார்.
இந்த அமைச்சு பதவிக்கு ஜனாதிபதி புதிய அமைச்சர் ஒருவரை நியமிப்பார் எனவும் தான் தொடர்ந்தும் கமத்தொழில் அமைச்சராக பதவி வகிப்பதாகவும் மகிந்த அமரவீர கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தொடர்ந்தும் செய்திகள் வெளியாகி வந்த போதிலும் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை.
பொதுஜன பெரமுனவை சேர்ந்த 12 பேருக்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என அந்த கட்சி ஏற்கனவே ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளது.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றை சேர்ந்தவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவுக்கும் அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சு பதவிகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
எனினும் எப்போது இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படும் என்பது குறித்து அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
