நானுஓயா விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது!

நானுஓயா– ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 3 சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் வேகமாக சென்று வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதிய பேருந்தினை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

62 வயதான குறித்த சாரதி, விபத்து இடம்பெறுவதற்கு முன்னரும் பல பிரதேசங்களில் அதிவேகமாக பயணித்தமையை பொதுமக்கள் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Exit mobile version