இலங்கைத் தமிழ் அரசு கட்சி வேட்புமனு தாக்கல் 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுவை இலங்கைத் தமிழ் அரசு கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்த பின்னர் அவர்கள் ஒரு கட்சியாக எதிர்கொள்ளும் முதலாவது தேர்தல் இதுவாகும்.யாழ்.மாவட்டத்திலுள்ள 17 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக யாழ்.மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பதில் பொதுச் செயலாளர் பி.சத்தியலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் இலங்கைத் தமிழ் அரசு கட்சி தனித்தனியாக வேட்புமனுக்களை சமர்ப்பித்திருந்தது
Exit mobile version