ரயிலுடன் ஆட்டோ மோதி விபத்து; ஒருவர் ஸ்தலத்தில் பலி

மாத்தறை வெலிகமவில் காலு குமாரி கடுகதி ரயில் ஆட்டோ வண்டியுடன் மோதி நேற்று காலை விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஆட்டோ வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (22) காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில், முச்சக்கரவண்டியின் சாரதியான தெலிஜ்ஜவில பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான தம்மிக்க தேசப்பிரிய உயிரிழந்துள்ளதுடன், 22 வயதான கிரிஷான் மதுசங்க காயமடைந்துள்ளார்.

முச்சக்கர வண்டியானது புகையிரத சமிக்ஞை விளக்கு ஒளிரும் நிலையிலும் கவனக்குறைவாக புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version