அரச ஊழியர்களுக்கான ஜனவரி மாத சம்பளம்! சற்று முன்னர் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம் தொடர்பில் விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளத்திற்கான திகதிகள் குறித்த அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில், நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரிகளுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி மாதம் 25 அல்லது 26 ஆம் திகதி வழங்கப்படுமெனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version