வேன்,பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு – 6 பேர் படுகாயம்..!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் சிலாபம் பகுதியிலிருந்து காத்தான்குடி நோக்கி சென்ற வேனும் கல்முனையிலிருந்து கதுறுவெல நோக்கி பயணித்த பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் வேன் சாரதி உயிரிழந்துள்ளதுடன், வேனில் பயணித்த ஆறு பேர் காயங்களுக்குள்ளாகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version