கரையோர ரயில் சேவைகளில் தடங்கல்

தெற்கு களுத்துறை புகையிரத நிலையத்துக்கு அருகில் புகையிரத இயந்திரம் தடம் புரண்டதால் கரையோர புகையிரத சேவை களுத்துறை புகையிரத நிலையத்துக்கு அருகில் முற்றாக முடங்கியுள்ளது.

இந்த ரயில் தெற்கு களுத்துறையில் இருந்து மருதானை நோக்கிச் செல்லும் சரக்கு ரயிலாகும்.ரயில் இயந்திரத்தை மாற்றுவதற்காக மருதானை நோக்கி சென்று கொண்டிருந்த போது தெற்கு களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
இதனால், ரயில்வேயின் பல கொன்கிரீட் சிலீப்பர்கள் சேதமடைந்துள்ளன.

அந்த இடத்தில் ரயில் கடவை இருப்பதால் அதன் அருகில் எந்த ரயிலையும் இயக்க முடியவில்லை.காலியிலிருந்து வரும் புகையிரதங்களும் தெற்கு களுத்துறை நிலையத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
Exit mobile version