தாமரைக் கோபுரத்தில் இலவச மருத்துவ முகாம்

கொழும்பு தாமரைக் கோபுரம் மற்றும் இலங்கை இராணுவ மருத்துவப் பிரிவு உள்ளிட்டன இணைந்து நடாத்தும் சிரேஷ்ட பிரஜைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
இலங்கை இராணுவ மருத்துவப் பிரிவின் ஒத்துழைப்புடன் இலவச மருத்துவ முகாம் ஒன்றை ஜனவரி 28ஆம், 29ஆம் திகதிகளான இன்றும்  நடத்தவிருப்பதாக கொழும்பு தாமரைக் கோபுரம் அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வு கொழும்பு தாமரைக் கோபுரத்தின் இரண்டாவது மாடி கட்டி டத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

இந்த மருத்துவ முகாமில் பற்கள் தொடர்பான பரிசோதனை, ENT பரிசோதனை, கொலஸ்டரோல் பரிசோதனை, நீரிழிவு நோய்க்கான பரிசோதனை (12மணி நேரம் மற்றும்10 மணிநேரம் உணவின்றி இருத்தல் அவசியம்), கண் பரிசோதனை, ECG, BMI குருதி அழுத்தப் பரிசோதனை போன்றனவும் இடம் பெறவுள்ளதுடன் இந் நோய்களுக்கான இலவச ஆலோசனையும் இதன் போது வழங்கப்படடும்.

Exit mobile version