எல்பிட்டிய, ஓமத்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கொலை செய்யப்பட்டதாக சந்தேகிகப்படும் இரு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட பெண் ஒருவர் 80 வயதுடையவர் எனவும் மற்றைய பெண்ணுக்கு 69 வயது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் இருவரும் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர்.
இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்ட பெண்கள் இருவரும் உறவினர்கள் என தெரிலித்துள்ள எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
