இத்தாலி அருகே கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகு! 8 புலம்பெயர்ந்தோர் மரணம்

இத்தாலியில் அருகே உள்ள தீவொன்றில் படகொன்று மூழ்கியதில் 8 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், கப்பலில் பயணித்த 40 பேரை இத்தாலிய கடலோரக் காவல்படையினர் இரவோடு இரவாக மீட்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்கள் சிசிலியின் தெற்கே அமைந்துள்ள லம்பேடுசாவில் உள்ள முக்கிய துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றதாக செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version