நேருக்கு நேர் மோதிய பேருந்து மற்றும் கார்! செங்குத்தாக பள்ளத்தில் கவிழ்ந்ததில் 30 பேர் பலி..!

பாகிஸ்தானில் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கில்கிட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று ராவல்பிண்டிக்கு சென்றுகொண்டிருந்தது. கோஹிஸ்தான் மாவட்டத்தின் காரகோரம் நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, எதிரே வந்த கார் மீது பலமாக மோதியது.

இதில் பேருந்து, கார் இரண்டும் செங்குத்தாக பள்ளத்தில் விழுந்தன. இந்த கோர விபத்தில் 30 பேர் பலியாகினர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த துயர சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

Exit mobile version