அரச ஊழியர்களின் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தற்போது ஆற்றிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிககையில், நேரடி வரிகளை அதிகரிப்பதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த வரிச்சுமையை குறைக்க முடியும்.
தற்போதைய நிலை தொடர்ந்தால் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க முடியும். இந்த ஆண்டு இறுதியில் வட்டி வீதங்களை குறைக்க முடியும்.
நான் பிரபலமடைவதற்காக இந்த பதவியை பெறவில்லை. வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீள கட்டியெழுப்ப செயற்பட்டு வருகிறோம்.
அதற்காக இந்த வருட இறுதிக்குள் பணவீக்க வீதத்தை ஒற்றை இலக்கமாக குறைக்கும் இலக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது அரசியல் ரீதியாக விரும்பத்தகாத தீர்மானம் என்றாலும் நாட்டைக் கட்டியெழுப்ப அத்தகைய தீர்மானங்களை எடுக்கத் தயாராக உள்ளோம்.
இதன் பலன்களை எதிர்வரும் 2 – 3 ஆண்டுகளில் மக்கள் உணர்ந்து கொள்வார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
