தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் நேற்று முன்தினம் முதல் ‘விலங்குகள் காதல் வாரம்’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக விலங்கியல் பூங்கா பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.
காதலர் தினத்தை முன்னிட்டு விலங்குகளுக்கு அன்பும் கருணையும் அளிக்கும் நோக்கில் இந்த வாரம் செயல்படுத்தப்படுகின்றது. இதற்கமைய, குடும்பங்கள் மற்றும் தம்பதிகள், விலங்கியல் பூங்காவுக்குச் சென்று செல்லப் பிராணிகளுக்கு உணவளித்து, புகைப்படம் எடுக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலங்குகளுடன் புகைப்படம் எடுக்க தனி பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், வருகை தரும் பார்வையாளர்களுக்கு இந்த வாரத்தில் விசேட அங்கத்துவ அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரேமகாந்த மேலும் தெரிவித்துள்ளார்.
