வாக்காளர் ஒருவர் ஒரு வாக்கை அளிப்பதற்கே தகுதியுடையவர்

வாக்காளர் ஒருவர் ஒரு வாக்கை அளிப்பதற்கே தகுதியுடையவரென்பதுடன் வாக்களிக்கப்பட வேண்டிய பகுதியில் மாத்திரம் புள்ளடியிட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள சகல வாக்காளர் மற்றும் தபால் மூல வாக்காளர்களுக்கு  தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்காளரும் ஒரு வாக்கை அளிப்பதற்கு மாத்திரமே தகுதியுடையவரென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, வாக்குச் சீட்டில், கட்சிகளின் பெயர்கள், சின்னங்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடும் பட்சத்தில் சுயேச்சைக் குழுக்கள் என்ற வார்த்தை மாத்திரமே அச்சிடப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்குச் சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் அல்லது தேர்தல் தொகுதிகளின் பெயர்கள் மற்றும் எண் குறிப்பிடப்படுவதில்லை.

அதன்படி, வாக்களிக்கப்பட வேண்டிய பகுதியில் மாத்திரம் புள்ளடியிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமை உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சகல கட்சிகளினதும் செயலாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சித் தேர்தலுக்காக நிதி அமைச்சினால் ஒதுக்கிடப்பட்டுள்ள நிதி, இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவில்லையென பெஃப்ரல் அமைப்பு கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version