128 மணி நேரத்துக்கு பின் 2 மாதக் குழந்தை மீட்பு../.

துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய 02 மாதக்குழந்தை 128 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் கடந்த திங்கள்கிழமை 7.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், பல்வேறு நகரங்களில் 6,000 மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமாயின.

இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரையில் 34,000 த்தையும் தாண்டியுள்ளது. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால்

உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிரிக்கக் கூடுமென்று அஞ்சப்படுகிறது.

கடுமையான உறைபனி சூழலுக்கிடையிலும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தங்களது பணிகளை அயராது மேற்கொண்டு வருகின்றனர் .

இந்நிலையில், பிறந்து இரண்டு மாதங்களேயான ஒரு குழந்தை 128 மணி நேரத்துக்குப்

பிறகு இடிபாடுகளிலிருந்து மீட்கப் பட்டுள்ளமை மீட்பு குழுவினரிடையே மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான மீட்பு குழுவினரின் சோர்வடையாத பணியால் ஏராளமானோர் மீட்கப்பட்டுள்ளதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version