யாழ். மாநகர சபையின் வரவு – செலவு திட்டம் இன்று செவ்வாய்க் கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மாநகரின் ஆட்சிக்காலத்தில் ஏற்கெனவே வரவு – செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் பதவியிழந்த தற்போதைய முதல்வர் இ. ஆர்னல்ட் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கிறார். இன்றைய தினம் நடைபெறவுள்ள வரவு – செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தமிழரசுக் கட்சி தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றது.
இந்த வரவு – செலவு திட்டத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை. மணிவண்ணன் தரப்பு வரவு – செலவு திட்டத்தை எதிர்க்கும். இதேசமயம் ஈ.பி.டி. பியின் நிலைப்பாடு என்ன என்பதும் தெரிய வரவில்லை.
