கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்படும்

மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் உணவு பொதிகள், கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விலை 10% ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version