மஸ்கெலியா வனப் பகுதி விஷமிகளால் தீ வைப்பு….

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட சின்ன நடு தோட்ட பிரிவில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைந்துள்ள பகுதியிலுள்ள வனப் பகுதி நேற்றுமுன்தினம் விஷமிகளால் தீ வைக்கப்பட்டமையால் முழுமையாக எரிந்து அழிவடைந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் வாழ்ந்த வன ஜீவராசிகள் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. விஷமிகளின் தீ வைப்புகள் மத்திய மலைநாட்டில் அதிகரித்துள்ளதால் நீர் ஊற்றுகள் வற்றிபோகும் அபாயம் தோன்றியுள்ளது.

இதனை கட்டுப்படுத்த மலையக பகுதிகளிலுள்ள அனைத்து மக்களும் முன் வர வேண்டுமென மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

Exit mobile version