மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

மினுவாங்கொடை போரகொடவத்த ருவன் மாவத்தை சந்தியில், நேற்றிரவு நபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார்.ஆடியம்பலம் – பீல்லவத்தை பகுதியைச் சேர்ந்த, சந்து எனப்படும் ப்ரபாத் பிரியங்கர என்ற 30 வயதான இளைஞரே இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, வீதியின் ஓரத்தில் மறைந்திருந்த ஒருவர், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிப் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இதன்போது உயிரிழந்தவர், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் என்பதுடன், பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில், நீதிமன்ற பிணையில் உள்ளவர் என்றும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
Exit mobile version