விமான நிலையத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற நபர்…!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பஹரேனுக்கு செல்லவதற்கு கைத்துப்பாக்கியுடன் சென்ற கம்பளையைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (19) கைது செய்து செய்யப்பட்டதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளையைச் சோந்த குறித்த நபர் நேற்று பகல் பஹரேனுக்கு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரின் பையை விமான நிலைய சோதனைச் சாவடியில் விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சோதனை செய்தபோது பையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி ஒன்றை கண்டுபிடித்தனர்.

இதன்போது பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த நபரை கைது செய்ததுடன் கைத்துப்பாக்கியையும் மீட்டுள்ளனர.

இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version