களனியை சூழவுள்ள பல பிரதேசங்களுக்கு இன்று (21) காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
களனி, பிரஞ்சுவத்தை வீதி மற்றும் சரசவி மாவத்தையில் அவசர திருத்த வேலைகள் இடம்பெற்று வருவதே இதற்குக் காரணம்.
இதன்படி வத்தளை, ஹந்தல, அல்விஸ் டவுன், வெலிகடமுல்ல, கெரவலபிட்டிய, மாபோல, நாயக்கந்த, கலகஹடுவ மருதானை வீதி, ஹுனுப்பிட்டிய, வெடிகந்த, வெவெல்துவ, பிரஞ்சுவத்தை, கிரிபத்கொட புதிய வீதி, பதிலியதுடுவ, அக்பர் தோரியாவௌ, தலுபிட்டி வீதி வரையான பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
