அம்பாறை மாவட்டத்தில் இம்முறை பெரும்போக நெற்செய்கையாளர்களிடமிருந்து உத்தரவாத விலைகளுக்கு நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்கான வேலைத்திட்டம் (22) அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் தலைமையில் ஆரம்பமானது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் கீழ் நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகளிடமிருந்து அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்பட்டது. இதன்படி, ஒரு கிலோ உலர்ந்த நெல் 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகிறது. விவசாயி ஒருவரிடமிருந்து குறைந்தபட்சம் 2,000 கிலோ நெல் கொள்வனவு செய்யப்படும். அதேவேளை, அதிகபட்சமாக 5,000 கிலோ நெல்லும் அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டு வருகிறது.
இம்முறை, அம்பாறை மாவட்டத்தில் செய்கை பன்னப்பட்ட 81,000 ஹெக்டேயர் நெற்செய்கையில், சுமார் 03 இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் அறுவடை செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றுள் சுமார் 25 சதவீத அறுவடை நெல்லை அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்ய உத்தேசித்திருப்பதாகவும் அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் இதன்போது தெரிவித்தார்.
