கடந்த 6 வாரங்களில் காலி மாவட்டத்தில் 164 டெங்கு நோயாளர்கள்

கடந்த ஆறு வாரங்களில் காலி மாவட்டத்தில் 164 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

காலி மாநகர சபை, பத்தேகம, பலபிட்டிய, ஹபராதுவ, அக்மெய்மன ஆகிய பகுதிகளில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பிராந்திய தொற்றுநோய் நிபுணர் டாக்டர் எரங்க ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அந்த காலப்பகுதியில் காலி மாவட்டத்தில் டெங்கு மரணம் எதுவும் பதிவாகவில்லை என வைத்தியர் எரங்க ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

குறித்த பிரதேசங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version