கொரோனா வைரஸ் பரவியது எவ்வாறு? வௌியான தகவல்..!

Coronavirus economic impact concept image

கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்து பரவியிருக்கலாம் என்று அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் அவ்வப்போது கூறி வருகின்றன.

ஆனால் அமெரிக்க எரிசக்தி திணைக்களம் குறித்த புலனாய்வுத் தகவல் தொடர்பில் முதற்கட்ட மதிப்பீட்டை ​மேற்கொண்டுள்ளது.

அதன்படி, கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து வௌியானது என்பதை முற்றிலும் உண்மை என்று கருதுவது கடினம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

புலனாய்வுத் தகவல் உண்மைத்தன்மையை மதிப்பிடலாம். இது குறைந்த, நடுத்தர மற்றும் அதிக நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

கொரோனா தொடர்பான புலனாய்வுத் தகவல் “குறைந்த” நம்பிக்கை என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து பரவியுள்ளதாக சிலர் கூறும் நிலையில், இது சுற்றுச்சூழலில் இருந்து தானாகவே தோன்றியிருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

எனவே, கொரோனா வைரஸின் பரிணாமம் குறித்து தெளிவான முடிவுக்கு வருவது கடினமாக உள்ளது.

Exit mobile version