யாழ்ப்பாணம் கோப்பாய் உடையன்காடு கிராமத்தில் இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வீடொன்றில் நுழைந்த இருவர் வயோதிப தம்பதிகளை ஏமாற்றி 38 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளதாக கோப்பாய் பொலிஸாருக்கு நேற்று முறைப்பாடு கிடைத்துள்ளது.
குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
