யாழில் 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் முத்திரை பதிக்கப்படாத தராசுகளை பயன்படுத்திய 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பண்ணை மீன்சந்தை, நவாந்துறை மீன்சந்தை, காக்கைத்தீவு ஆகிய இடங்களில் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் அதிகாரிகளால் திடீர் சோதனை நடவடிக்ககைள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது இந்த வருடத்திற்குரிய அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் முத்திரையை பெற்றுக்கொள்ளாது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 11 பேருக்கு எதிராகவே சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வர்த்தகர்களை பாதுகாக்கும் நோக்கில் எதிர்காலத்திலும் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இதன்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நுகர்வோருக்கு நம்பகத்தன்மையுடைய சேவையை வழங்குவதற்கு வர்த்தகர்கள் முன்வரவேண்டும் எனவும் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

Exit mobile version