கொழும்பில் நாளை 24 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு

#sri lanka #water #board #Newsinfirst

#sri lanka #water #board #Newsinfirst

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (04) சனிக்கிழமை பி.ப. 2.00 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10, 11 ஆகிய பகுதிகளுக்கு, நாளை (04) சனிக்கிழமை பி.ப. 2.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (05) பி.ப. 2.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுலில் இருக்குமென சபை தெரிவித்துள்ளது.

மாளிகாகந்த நீர் சேகரிப்பு நிலையத்திற்கு நீர் விநியோகிக்கும் நீர் விநியோக குழாய் தொகுதியில் மேற்கொள்ளவுள்ள அத்தியாவசிய மேம்படுத்தல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும், உரிய காலப் பகுதிக்கு தேவையான நீரை சேகரித்து வைப்பதன் மூலம் அசௌகரியங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் சபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பு 01 – 15 பெயர்கள் (Colombo 01 – 15 Names)

கொழும்பு 1 – கோட்டை
கொழும்பு 2 – கொம்பனித்தெரு, யூனியன் பிளேஸ்
கொழும்பு 3 – கொள்ளுப்பிட்டி
கொழும்பு 4 – பம்பலப்பிட்டி
கொழும்பு 5 – ஹெவ்லாக் டவுன், கிருலப்பனை, கிருலப்பனை வடக்கு, நாரஹேன்பிட்டி
கொழும்பு 6 – வெள்ளவத்தை, பாமன்கடை
கொழும்பு 7 – கறுவாத்தோட்டம்
கொழும்பு 8 – பொரளை
கொழும்பு 9 – தெமட்டகொட
கொழும்பு 10 – மருதானை, பஞ்சிகாவத்தை
கொழும்பு 11 – புறக்கோட்டை
கொழும்பு 12 – புதுக்கடை, வாழைத்தோட்டம்
கொழும்பு 13 – கொட்டாஞ்சேனை, புளூமெண்டல்
கொழும்பு 14 – கிராண்ட்பாஸ்
கொழும்பு 15 – மோதறை/முகத்துவாரம், மட்டக்குளி, மாதம்பிட்டிய

Exit mobile version