உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான திருத்தப்பட்ட திகதி இன்று (மார்ச்.03) அறிவிக்கப்படவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட தற்போது எழுந்துள்ள சிக்கல் நிலைகள் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று (மார்ச்.03) கூடவுள்ளது.
நிதி கிடைக்காததால் திட்டமிட்டபடி 9ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
இன்று (மார்ச்.03) இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் அரசாங்க ஊடகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களை அழைத்து வாக்கெடுப்பு தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.
