“எனக்கு சுகாதார அமைச்சர் பதவி கிடைத்தால் அனைத்தையும் செய்வேன்.

“எனக்கு சுகாதார அமைச்சர் பதவி கிடைத்தால், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள துரதிஷ்டமான சூழ்நிலையிலிருந்து மீட்பதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.
சுகாதார அமைச்சர் பதவியை ஏற்கத் தயார் என, களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,

“எனக்கு சுகாதார அமைச்சர் பதவி கிடைத்தால், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள துரதிஷ்டமான சூழ்நிலையிலிருந்து மீட்பதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.

இந்த நேரத்தில் மக்களுக்குத் தேவை தேர்தல் அல்ல, உணவுதான்” என்றார். மேலும் சில அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவியமைக்கு பதிலளித்த அவர், எந்தவொரு அரசாங்கமும் தனது எதிர்கால நலன் கருதி அமைச்சர்களை நியமிக்கும் எனவும், தெரிவித்தார்.

Exit mobile version