திறைசேரி உண்டியல்களை விற்பனை செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.இதன் பிரகாரம் இம்மாதம் 15 இல்,இந்த உண் டியல்கள் ஏலத்தில் விற்கப்படவுள்ளன. அன்றைய தினம் (15) ஒரு இலட்சத்து 20,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வு காலத்தை கொண்ட 50,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வு காலத்தை கொண்ட 35,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வு காலத்தை கொண்ட 35,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்களும் ஏலமிடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
