நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து !

மடகஸ்காரில் கைது செய்யப்பட்ட “ஹரக் கட்டா” மற்றும் “குடு சலிந்து” ஆகியோர் இன்று (15) காலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் மடகஸ்காருக்குச் சென்றதுடன், அவர்கள் கென்யா மற்றும் இந்தியா ஊடாக இன்று நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

“ஹரக் கட்டா” மற்றும் “குடு சலிந்து” ஆகியோருடன் மேலும் 6 பேர் அந்த குழுவில் உள்ளதாகவும் மற்றும் ஹரக் கட்டாவின் மனைவி என்று கூறப்படும் வெளிநாட்டு பெண்ணும் அந்த குழுவில் உள்ளடங்குகிறார்.

இக்குழுவினர் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும், இது தொடர்பில் மடகஸ்கார் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version