கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு!

#sri lanka #water #board #Newsinfirst

#sri lanka #water #board #Newsinfirst

கொழும்பு மற்றும் அதன் புறநகரின் சில பகுதிகளுக்கு நாளைமறுதினம் சனிக்கிழமை (25) பத்து மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

குறித்த தினத்தில் காலை 11 மணிமுதல் இரவு 9 மணிவரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, கோட்டே, கடுவெல மாநகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைகள் மற்றும் கொட்டிகாவத்தை – முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய நகரங்களிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Exit mobile version