கணினித்துறையில் பணிபுரிய லாவோஸ் சென்ற இலங்கை இளைஞர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட கணினி நிதி மோசடி செயற்பாடுகளில் ஈடுபடாத காரணத்தால், நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அந்நாட்டில் சிக்கியிருந்த 24 பேர் மீட்கப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு (24) வரப்பட்டனர். இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் காலி உள்ளிட்ட தென் மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கணினித்துறையில் கல்வி கற்ற இளைஞர்களாவர். சுமார் 4 மாதங்களுக்கு முன்னர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்யாமல், கணினித்துறையில் பணிபுரிவதற்காக வணிக விசாவின் கீழ், சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள தங்க முக்கோணப்பகுதியில் சிறப்பு பொருளாதார வலயத்தில் லாவோஸில் ‘போகியோ’ பணியகம் உள்ளது.
அங்கு அவர்களது கடவுச்சீட்டுகள், கைத்தொலைபேசிகள் மற்றும் பெறுமதியான ஆவணங்கள், நிறுவனத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பின்னர் இந்த குறிப்பிட்ட வலயத்தில் அமைந்துள்ள நிறுவனத்தின் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை குழுவிடம், பல்வேறு கணக்கியல் முறைகளைப் பயன்படுத்தி, இந்த வலயத்தில் போலி முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாக சுட்டிக்காட்டி, இதில் ஆர்வமுள்ளவர்களிடமிருந்து ஒன்லைனில் மோசடியூடாக பணம் பெற ஏற்பாடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை செய்ய மறுத்த இலங்கை இளைஞர்கள் குழுவை இலங்கைக்கோ அல்லது வெளியுலகத்துக்கோ தெரிய சந்தர்ப்பம் வழங்காமல் விசேட பொருளாதார வலயத்தை விட்டு வெளியேறுமாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், கணிணியில் சிறந்த திறமையைக் கொண்ட இந்த இலங்கை இளைஞர்கள் இந்தத் தடைகளைத் தாண்டி இந்த தொடர் நிகழ்வுகளை உலகுக்கு வெளிப்படுத்த பெரும் முயற்சியுடன் நடவடிக்கை எடுத்தது.
